Saturday, June 30, 2007

இதனால் சகலமானவர்களுக்கும்!

சில சூழ்நிலை மாற்றங்களினால், முன்பு போல, வலையுலகில் வலம் வர இயலவில்லை. இதனால் எனக்கு துளியும் வருத்தமில்லை.

மிதக்கும்வெளி, அய்யனார், லிவிங்மைல் பதிவர்களுடைய அறிவார்ந்த(!), புரியாத கவிதைகள், ரஜினி ரசிகர்களின் இம்சை பதிவுகள், டாலர் செல்வனின் அறிவு ஜீவித்தனமான(!), கட்டுரைகள் (இப்படி வரிசைப்படுத்தினால், நிலவு வரை நீளும். சே! என்ன வர்ணனை!) - லிருந்து தப்பி, நிறைய சந்தோசமாகவும், பழைய உற்சாகத்துடனும் நிம்மதியா வாழ்கிறேன்.

சமீபத்திய சூழ்நிலை மாற்றங்களுக்கான காரணகர்த்தாகளுக்கு நான் நிறைய நன்றிக் கடன்பட்டுள்ளேன். அதேவேளையில், இந்ந வலையுலகை அறிமுகப்படுத்தி, என்னை நோகடித்த அந்த அன்பரை கண்டுபிடித்து "உனக்கு என்ன தீங்கு செய்தேன்?" சட்டைப் பிடித்து, உலுக்கி கேள்வி கேட்கவேண்டும் என வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வலம் வந்த எனக்கே இந்த கதியென்றால், விக்ரமாதித்தனின் சளைக்காத முயற்சியோடும், பாயும், தலையணையோடும் வலையுலகமே கதியென வாழும் பல ஜீவன்களை நினைத்துப் பார்க்கிறேன். பிரமித்துப்போகிறேன். தொடர்ச்சியாக, காதல் படத்தில், பரத் கிறுக்காகி சுற்றித்திரியும் காட்சிதான் தவிர்க்க முடியாமல் நினைவில் எழுகிறது.

வாழ்க வலையுலக அறிவுஜீவிகள்!

பாவம் அப்பாவி மக்கள்!

1 comment:

கதிரவன் said...

'கருத்துச் சுதந்திரத்'தில் இதெல்லாம் ரொம்ப சகஜம்பா. :-))

இதுக்கு ஏன் நொந்து போறீங்க ? உங்களுக்குப் பிடிச்ச பதிவு ஒண்ணு கூடவா இல்ல ?