Monday, September 29, 2008

மொக்கை, கும்மி என்றால்?


//நான் வலைப்பதிவுகளுக்கு சற்று புதியவன். இந்த மொக்கை கும்மி போன்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று விளக்கினால் உதவியாக இருக்கும். ஈஸ்வரன்//

முன்குறிப்பு : என்னைப் பார்த்து, வலையுலகிற்கு புதியவரான ஈஸ்வரன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கலாம். என்னால் இயன்றவரை பதில் சொல்ல முயன்றிருக்கிறேன். எனக்கு அதில் பெரிய அனுபவம் இல்லை.
மொக்கையில், கும்மியில் மன்னர்கள், மன்னிகள், இளவரசுகள், இளவரசிகள் என ஒரு ராஜ்யமே நடத்துகிறவர்கள் இந்த கேள்விக்கு விடையளிக்க முயலுங்கள்.
ஈஸ்வரன்,
மொக்கை, கும்மி என்றால்...
சும்மா மாதிரி. அதற்கு பல அர்த்தங்கள் உண்டு.
நான் அறிந்த வரை உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறேன்.
உள்ளடக்கமே இல்லாமல் பதிவிடுவது. அதில் விவாதிக்க தகுதியே இல்லாத விசயங்களை, பல பின்னூட்டங்களில் விவாதிப்பது.
பதிவர்கள் தங்களுக்குள்ளே சொறிந்து கொள்வது. பதிவர்கள் தங்களுக்குள்ளே புகழ்ந்து கொள்வது.
அனானியாக வந்து, அவர்களுக்குள்ளே உள்குத்து குத்துவது. பல நேரம் இதற்காக ஒதுக்கி, உள்குத்து குத்துவது யார் என்பதை கண்டுபிடிக்க தீவிரமாய் ஆராய்வது.
படிக்காமாலே, ஏதோ சொல்ல வேண்டுமே என்பதற்காக எதையோ உளறிக்கொட்டுவது.
மொத்தத்தில், வலையுலகத்தை ஒரு கூட்டம் குட்டிச் சுவராக பயன்படுத்துவது மட்டும் இதன் பயன்.
பின்குறிப்பு : மொக்கை, கும்மி போன்றவற்றுக்கு நெகட்டிவாக சொல்லிவிட்டேன். சிலர் பாசிட்டிவாகவும் சொல்லக்கூடும். மற்ற பதிவர்களும் இதுபற்றி கருத்துச் சொல்லலாம்

2 comments:

வால்பையன் said...

நீங்கள் சொன்னது எல்லாம் பின்னூட்ட அரசியல் அது கும்மி வகையில் சேராது

நாமக்கல் சிபி said...

//மொத்தத்தில், வலையுலகத்தை ஒரு கூட்டம் குட்டிச் சுவராக பயன்படுத்துவது மட்டும் இதன் பயன்//

இதனை சீரியஸாக விவாதிக்கிறோம் என்ற பெயரிலும் செய்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் பல உள்ளன என்பதை வலைப் பதிவுலகம் நன்கறியும்!

மொக்கையின் பயன்கள்:
-----------------------

ஒரு தாய்ப்பிள்ளைகள் போல கிடைக்கும் உறவுகள். இது வலையுலகுக்கு அப்பாற்பட்டும் குடும்ப நண்பர்கள் அல்லது கூட்டுக் குடும்பம் போன்று தொடரும்!

மொக்கை அல்லாத சீரியஸ் விவாதத்திற்கு (குட்டிச் சுவராக அல்லாமல்)
சீரியஸான விஷயங்களை விவாதிக்கிறோம் என்று சண்டைகளிட்டு கடந்த சில வருடங்களாக பல பேரின் பிரஷரை ஏற்றி விட்டுக்கொண்டிருந்த சில சீரியஸ் பிரபலங்களைப் பற்றி புதிய மொக்கைப் பதிவர்கள் வேண்டுமானால் அறியாதிருக்கலாம். மூத்த மொக்கைப் பதிவர்களாகிய நாங்கள் நன்றே அறிந்திருக்கிறோம்!

இந்த ஒரு உதாரணம் போதும் என்று எண்ணுகிறேன்!