Wednesday, February 22, 2012

மான்ஸ்டர்ஸ்.ஐ.என்.சி 2 (Monster.I.N.C -2)- திரைப்பார்வை


அண்ணன் பையனுக்காக வேறு ஒரு டிவிடி வாங்கிய பொழுது, இந்த படமும் சேர்ந்து இருந்தது. நேற்று எதைச்சையாய் இந்த அனிமேஷன் படத்தைப் பார்த்தேன். பிடித்திருந்தது.

****

கதை எனப்பார்த்தால்...

ஒற்றைக்கண், பத்துகால்கள், எட்டு கைகள் கொண்ட விதவிதமான ஜந்துக்களின் விநோத உலகம் அது. அந்த உலகத்திற்கு தேவையான சக்திக்கு தேவை குழந்தைகளின் அலறல்கள். பூமியில் மனித குழந்தைகள் வசிக்கும் அறையினுள் ஜந்துக்களை உள்ளே அனுப்பி, பயமுறுத்தி, சக்தியை தயாரிக்கிறது ஒரு நிறுவனம்.

கதையின் நாயகனான சல்லி (Sulley) தான் பயமுறுத்தலில் நம்பர் ஒன். இரண்டாம் இடத்தில் வரும் ராண்டலுக்கு (Randall) சல்லியின் மீது பொறாமை. இதற்கிடையில் இந்த காலத்து குழந்தைகள் பயப்படாததால், சக்தி சேகரிப்பது சிரமமானதாக இருக்கிறது. அதனால், அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி (CEO) ராண்டலின் உதவியுடன் குழந்தைகளை கடத்தி, சித்திரவதை செய்து, அலறலில் சக்தி சேமிக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியில் ஒரு குழந்தையை கடத்தும் பொழுது, தற்செயலாய் சல்லிக்கு தெரியவர, களேபரம் தொடங்குகிறது. அந்த குழந்தையை காப்பாற்ற எடுக்கும் பரபர, சாசக போராட்டமே மீதிக்கதை.

இந்த களேபரத்தில், குழந்தைகளின் அலறலில் கிடைக்கும் சக்தியை விட, சிரிப்பில் அதிக சக்தி கிடைப்பதை சல்லி அறிகிறது. இறுதியில், குழந்தைகளை சிரிக்க வைத்து, சக்தி சேகரிப்பதாக படம் முடிவடைகிறது.

****

குழந்தைகளில் அலறலில் சக்தி சேகரிப்பது என்ற கரு தான் படத்தை தொடர்ந்து பார்க்க வைத்தது. துவக்கம் முதல் இறுதி வரை நகைச்சுவையாகவும், தொய்வு இல்லாமல், விறுவிறுப்பாக நகருகிறது படம். படத்தில் பல சாகசங்களும் இருக்கிறது.

****

அந்த குட்டிப்பெண் செய்கிற சேட்டைகள் சொல்லி மாளாது. குழந்தைகள் தொட்டால், ஜந்துக்கள் தாங்கள் காலி என்று விதி இருப்பதால், குழந்தையை கண்டதும், அலறி ஓடுவது செம ரகளை.

கதையின் போக்கில் நாயகன் சல்லிக்கும், அந்த குழந்தைக்குமான பாச உணர்வை காட்டியிருப்பது அருமை.

****
வால்ட் டிஸ்னி தயாரித்து, 2001ல் வெளிவந்த‌ அச்சு அசலான ஹாலிவுட் படம். இந்த படத்தை ஜெட்டிக்ஸ்-ல் அடிக்கடி போடுவதாக அலுவலக நண்பர் சொன்னார். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

****

4 comments:

Kumaran said...

விமர்சனம் அருமை..அருமை..கச்சிதமாக சிறப்பாக எழுதியுள்ளீர்கள் சகோ..நன்றி..நான் அனிமேஷன் படங்களை பார்ப்பது மிகவும் குறைவு..வாய்ப்பு கிடைப்பின் இந்த படத்தை பார்க்கிறேன்.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

ஹாலிவுட்ரசிகன் said...

ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அனிமேஷன் ரசிகர்களுக்கு கட்டாயம் படம் பிடிக்கும்.

குமரன் said...

குமரன்,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

உங்கள் தளத்தை கிளிக்கினால், திறக்க மறுக்கிறது. ஏதோ தொந்தரவு செய்கிறது. என்னவென்று பாருங்கள்.

குமரன் said...

ஹாலிவுட் ரசிகன்,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.