Monday, June 17, 2013

உள்ளதை உள்ளபடி எழுத தெரியாதோ?!

//மணிவண்ணன் இளமையில், கோவையில் இருந்த காலத்தில்... ‘தீவிரமான கம்யூனிஸ்ட் இயக்க போராளியாக’ இருந்தார். போராளிகளை, போலிஸ் ‘நக்ஸலைட்’ என அழைக்கும்.
முக்கிய நக்சல்களை ‘என்கவுண்டரில்’ போட்டுத்தள்ள திட்டமிட்டது. லிஸ்டில், முதல் பெயர் மணிவண்ணன். தகவலறிந்த நண்பர்கள் மணிவண்ணனை சென்னைக்கு கடத்தினார்கள்.//


- உலக சினிமா ரசிகன் - தன்னுடைய வலைப்பதிவில்...

//பொதுவுடமை கட்சியில் தீவிரமாக வேலை செய்தவர்.கட்சிக்காக சுவரெழுத்து எழுதி உழைத்தவர்.அவரின் தீவிர பொதுவுடமை கருத்துக்களை ஏற்க முடியாமல் கட்சியில் இருந்து தீவிரகம்யுனிஸ்ட் என்று முத்திரை குத்தி தூக்கி வீசப்பட்டவர்.//

- இயக்குநர் களஞ்சியம் - முகநூலில்!

ஒரு மனிதர் இறந்துவிட்டால் அவருக்கு ஒளிவட்டம் போடுவதற்காக ஜு.வி., நக்கீரன் ரேஞ்சை விட அதிகமாக எழுதி தள்ளுகிறார்கள். ஏகமாய் அள்ளிவிட்டு,  இருக்கிற நற்பெயரையும் கெடுக்கிறார்கள்.

கோவையில் இருந்த பொழுது பொதுவுடைமை அமைப்பில் வேலை செய்தவர். திரைப்பட ஆர்வத்தில் அமைப்பை விட்டு விலகி, சென்னைக்கு நகர்ந்தவர் என்று தான் ஒரு தோழர் மூலம் கேள்விப்பட்டுள்ளேன்.

உள்ளதை உள்ளபடி எழுத தெரியாதோ?!

மற்றபடி, மணிவண்ணன் எனக்கும் பிடித்த நடிகர் தான்!

3 comments:

உலக சினிமா ரசிகன் said...

கோவைக்கு வந்தால் அவருடைய வழக்குக்காக வாதாடிய வக்கீல் இன்னும் இருக்கிறார்.
அவரிடம் அழைத்து செல்கிறேன்...
வருவீர்களா வெந்த குமாரா.
[ அவர் செம்மலர் பத்திரிக்கையில் துணை ஆசிரியராக இருந்தவர்.]
செம்மலர் பத்திரிக்கை என்றால் தெரியுமா ...நொந்த குமாரா ?

குமரன் said...

உலக சினிமா ரசிகன் அவர்களே!

உங்களுடைய பதிவில் ஏன் என்னுடைய பின்னூட்டத்தை ஏன் அனுமதிக்கவில்லை. ஆதாரம் தானே கேட்டேன். உங்கள் தரப்பில் ஆதாரம் தான் காட்டுகிறீர்களே!

நான் உங்களைப் போல இல்லை. உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்து பதிலும் சொல்லியிருக்கிறேன்.

கோவையில் அவர் இருந்த காலத்தில் வேலை செய்த காலத்தில் வேலை செய்த தோழர்களை நான் அறிவேன். மணிவண்ணன் பற்றிய சொல்லிய செய்திகளை தான் பகிர்ந்துள்ளேன்.

எனக்கு இரண்டு விவரங்கள் சொல்லுங்கள். அவர் எந்த கம்யூ. அமைப்பில் இருந்தார். அவர் பணியாற்றிய ஆண்டு எது? இந்த இரண்டு தகவல்களை சொன்னால், நானும் உரசி பார்க்க வசதியாக இருக்கும்.

நன்றி

உலக சினிமா ரசிகன் said...

திரு.குமரன் அவர்களே...நான் கூறிய தகவல்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே எனது நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டது.
அவர் இறந்ததற்காக...
இட்டு கட்டப்பட்டது அல்ல.

மேலும் நீங்கள் தகவலறிய எனது நண்பரின் அனுமதி பெற்று அவரது அலைபேசி எண் பெற்று தருகிறேன்.
பொறுத்திருக்கவும்.

தங்கள் பின்னூட்டம் வெளியிடாதது பற்றி எனது பதிவில் விளக்கம் அளித்திருக்கிறேன்.