Sunday, May 4, 2014

பாதியில் நிறுத்திய புத்தகங்கள் – சில குறிப்புகள்

பாதியில் எழுந்து வந்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்! ஆனால், பாதியில் நிறுத்திய புத்தகங்கள் மிக அதிகம்!

பாதியில் நிறுத்திய புத்தகங்களை படித்து முடிக்க பல சமயங்களில் விக்ரமாதித்தன் போல முயன்று தோற்றிருக்கிறேன்! அபூர்வமாய் சில சமயங்களில் ஜெயித்து இருக்கிறேன்!

பாதியில் நிறுத்தியதாலேயே என்றென்றைக்கும் மனதில் தங்கிய புத்தகங்களும் உண்டு!

கனவுகள் தொடர்பற்று வருவதற்கு பாதியில் நிறுத்திய புத்தகங்கள் தான் காரணம் என நம்புகிறேன்! :)

பாதியில் நிறுத்திய புத்தகங்களுக்கு நான் மட்டும் தான் காரணமா! அதை எழுதிய எழுத்தாளர்களுக்கும் சரிவிகித பங்கு இருக்கிறது! :)

பாதி படித்துக்கொண்டிருக்கும் பொழுது, இரவல் வாங்கி செல்பவர்கள் எப்பொழுதும் திரும்பி தந்ததேயில்லை.  அவர்கள் அந்த நாவலின் பெயரிலேயே நினைவில் நிற்கிறார்கள்.


‘Semi reading book’ என கூகுளில் தேடினால், ஆடையே இல்லாமல் ஒரு இளம்பெண் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறாள். வெட்கமாக போய்விட்டது! :)

No comments: