Thursday, August 7, 2014

ஒரு விபத்தும் ‘கூடா நட்பும்’



அடையாறு மேம்பாலத்தில் ஓர் ஆணும், பெண்ணும் பைக்கில் செல்கிறார்கள்.  திடீரென்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தின் கம்பியின் இடித்து 30 அடி உயரத்திலிருந்து ஆண் தரையில் விழுகிறார். பெண் சிக்னலில் நின்று கொண்டிருந்த ஜீப்பின் மேல் விழுகிறார். ஜீப்புக்கு கொஞ்சம் சேதம். பெண்ணுக்கு எந்த அடியும் இல்லை.  ஆணுக்கோ தலையில் காயம்.  மருத்துவமனைக்கு அள்ளிப்போகிறார்கள். 

-    இது ஒரு சாதாரண செய்தி! ஆனால், இந்த செய்தியை எப்படி ‘சுவாரசியப்படுத்துகிறார்கள்’ என்றால்…

ஜீப்பில் இருந்து விழுந்த அந்தப் பெண், ஒரு நொடி,  உடன் வந்த ஆணைப் பார்க்கிறார். அவரிடமிருந்து செல்போன், இன்னும் ஒன்றிரண்டு விசயங்களை எடுத்துக்கொண்டு, உடனே, ஒரு ஆட்டோவைப் பிடித்து அங்கிருந்து போய்விடுகிறார்.

ஆண் பற்றிய தகவல் ஏதும் இல்லை.  வண்டி எண்ணை வைத்து, பெயர், முகவரி கண்டுபிடித்து விசாரிக்கிறார்கள்.  அவர் ஒரு பெயிண்டர்.  RAபுரத்தைச் சார்ந்தவர்.   அவருடைய மனைவி நர்சாக பணிபுரிகிறார்.  தினமும் தனது மனைவியை மருத்துவமனையில் விட செல்லும் பொழுது, அங்கு வேலை செய்யும் இன்னொரு நர்சிடம் பழக்கம் ஏற்படுகிறது.

இருவரும் கிழக்கு கடற்கரை சாலைக்கு ‘டேட்டிங்’ கிளம்பி போகும் பொழுது தான் விபத்து ஏற்படுகிறது!

இந்த செய்தி தமிழ் இந்துவில் வெளிவந்ததால், ‘கள்ளக்காதல்’ என்று போடவில்லை. வேறு ஒரு செய்தியில், ‘கூடா நட்பு’ என எழுதியிருந்தார்கள்.  இதே செய்தி தினத்தந்தியில் வெளிவந்திருந்தால், ‘கள்ளக்காதல்’ என வெளியிட்டிருப்பார்கள்.

No comments: